விபத்தில் சிக்கிய அரசு பஸ் 20 பயணியர் தப்பினர்

அன்னவாசல்:அன்னவாசல் அருகே அரசு டவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானதில், 20 பேர் காயத்துடன் தப்பினர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அந்தன்குடிப்பட்டி பகுதியில், நேற்று இலுப்பூரில் இருந்து கீரனுார் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

இந்த டவுன் பஸ்சில் பயணம் செய்த, 20 பயணியர் சிறு காயங்களுடன் தப்பினர். இவர்களை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக கீரனுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து, அன்னவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement