கர்நாடகா சட்டசபையில் களேபரம்: பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சஸ்பெண்ட்

பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரபான சூழல் நிலவியது. 18 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. மாநில பட்ஜெட் கடந்த 7ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு, எதிர்க்கட்சியான பா.ஜ., உட்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 21) பொதுப்பணி ஒப்பந்தத்தில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் ஒப்புதலுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.
இதற்கிடையே, அரசியல் தலைவர்களை ஹனி டிராப் மூலம் சிக்க வைப்பதாக கூறி சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் கூடி, காகிதங்களை கிழித்து தூக்கி எறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து (2)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21 மார்,2025 - 17:41 Report Abuse

0
0
Reply
अप्पावी - ,
21 மார்,2025 - 15:33 Report Abuse

0
0
Reply
மேலும்
-
குடும்ப அரசியலுக்கு மேலிடம் ஆதரவு பா.ஜ.,வில் நீக்கப்பட்ட எத்னால் விரக்தி
-
இளம்பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி
-
கொரோனா முறைகேடு குறித்து விசாரிக்க மற்றொரு கமிட்டி அமைக்க அரசு முடிவு
-
தங்கவயல் நகராட்சியில் ரூ.125 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் ரூ.2.36 கோடிக்கு உபரி என மதிப்பீடு
-
மொபைல் போனை பறித்த தாய் 15 வயது சிறுமி தற்கொலை
-
மாணவி கர்ப்பம் சித்தப்பா கைது
Advertisement
Advertisement