சுகாதார நிலையம் முன்புறம் தடுப்புகள் அமைக்க வேண்டும்
சுகாதார நிலையம் முன்புறம் தடுப்புகள் அமைக்க வேண்டும்
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தம் பிரிவில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும், பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் காய்ச்சல், சளி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். காலை, 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை முதியவர்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் மருத்துவரை பார்க்க வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சுகாதார நிலையத்தின் நுழைவுவாயிலில் தடுப்புகள் இல்லாததால், நாமக்கல், துறையூர் மெயின் ரோட்டில் இருந்து வரும் வாகனங்களால், அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகள் நடக்கிறது. எனவே, சுகாதார நிலையத்தின் முன்புறம் விபத்துகளை தடுக்கும் வகையில், தடுப்புகள் அமைக்க வேண்டும் அல்லது வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனு; மதுரை ஐகோர்ட் தள்ளுபடி
-
டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்; பணியிட மாற்றம் செய்ய முடிவு
-
பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டு பயணங்கள்; செலவு விபரங்கள் இதோ!
-
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை; அன்புமணி குற்றச்சாட்டு
-
வெடித்துச்சிதறிய பாலி எரிமலை: சர்வதேச விமான சேவை ரத்து
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Advertisement
Advertisement