ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனு; மதுரை ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை; ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமமான வாய்ப்பு மற்றும் உரிமை வழங்க ஜாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மாநில அரசே கணக்கெடுப்பு நடத்தலாம் என்று சில அரசியல் கட்சிகளும், மத்திய அரசுதான் நடத்த முடியும் என்று தி.மு.க.,வும், மாறி மாறி கூறி வருகின்றன.
நாட்டில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவுகள் வெளியிடப்பட வில்லை.
இந் நிலையில், தமிழகத்தில் மக்களின் சமூக, பொருளாதார நிலையை அறிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரி பொதுநல வழக்கு தாக்கலானது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். இந்நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.




மேலும்
-
கவுரவிப்பு விழா: நாளை நடக்குது
-
பாறை உடைக்க பயன்படுத்திய 'குப்பெட்டா' பறிமுதல்
-
யானை தாக்கி ஒருவர் காயம்: வனத்துறை விசாரணை
-
போதை மருந்து பயன்படுத்திய ஒன்பது பேருக்கு எச்.ஐ.வி., மாநில எல்லையில் உள்ள மக்கள் அதிர்ச்சி
-
சாலையில் முகாமிடும் கால்நடைகள் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு
-
ஊட்டிக்கு பூங்கா திட்டத்தை மாற்ற கூடாது கூடலுார் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்