'சிசிடிவி' கேமராவை உடைத்த இருவர் கைது


'சிசிடிவி' கேமராவை உடைத்த இருவர் கைது


நாமக்கல்:நாமக்கல் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவை உடைத்த வழக்கில், இரண்டு பேரை போலீ சார் கைது செய்தனர்.
நாமக்கல், கோட்டை பகுதியில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இதன் தர்மகர்த்தா ராஜேந்திரன், 60, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில், 'கடந்த 13ம் தேதி அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவர், போதையில் கோவில் பூசாரி ஸ்ரீகாந்த் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், நண்பர்களுடன் சேர்ந்து கோவிலுக்கு சொந்தமான 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை உடைத்து, சாக்கடையில் போட்டு விட்டனர்.
கேமராவை ஏன் உடைத்தீர்கள் என கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும்' தெரிவித்து இருந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார் விஜய், 26, வினோத்குமார், 27, ஆகிய இருவரை கைது செய்தனர்.

Advertisement