உலக சிட்டுக்குருவிகள் தினம்


உலக சிட்டுக்குருவிகள் தினம்


கரூர்:புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. உதவி தலைமையாசிரியர் யுவராஜ் தலைமை வகித்தார். சிட்டுக்குருவி ஆர்வலர் ராஜசேகரன் பங்கேற்று கூடு அமைப்பது எப்படி, மரக்கிளையில் எவ்வாறு கூடு கட்டுவது என்று செயல் விளக்கம் அளித்தார். பள்ளி வளாகத்தில், 10 மாணவர்கள் கொண்ட பசுமை குழுவாக பிரித்து மரக்கிளைகளில் சிட்டுக்குருவி கூடு அமைக்கப்பட்டது. பசுமைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, பள்ளி ஆசிரியர்கள் பொன்னுச்சாமி, பாலசுப்ரமணியன், சரவணன், அமல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement