ஸ்ரீவி., நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் சாட்சியம்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகரில் மாவட்ட பதிவாளர் அலுவலக ஊழியர் தங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் நேற்று சாட்சியம் அளித்தார்.

விருதுநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர் பாண்டுரங்கன். 2017ல் இவரது தான செட்டில்மெண்ட் பத்திரம் தொடர்பாக மாவட்ட பதிவாளருக்கு கோப்புகளை தயார் செய்து விரைந்து அனுப்ப, பதிவாளர் அலுவலக ஊழியர் தங்கம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஊழியர் தங்கம்மீது வழக்கு தொடர அப்போதைய பத்திரப்பதிவுத்துறை தலைவரும், தற்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனருமான குமரகுருபரன் அனுமதி அளித்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய நிலையில், குமரகுருபரன் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி வீரணனிடம் சாட்சியம் அளித்தார். பின் விசாரணையை ஏப்.,3க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement