சுகாதார ஆய்வாளர் சங்ககூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
சுகாதார ஆய்வாளர் சங்ககூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
சேலம்:தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க கூட்டமைப்பு சார்பில், சேலம் மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
அதில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குனர், ஊழியர் விரோதப்போக்குடன் செயல்படுவதால் விசாரித்து நடவடிக்கை எடுத்தல்; பொது சுகாதாரத்துறை இயக்குனர் வழிகாட்டுதல்களை மீறி மாவட்ட நிர்வாகத்தால் சுகாதார ஆய்வாளருக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் மாற்றுப்பணி உத்தரவுகளை உடனே ரத்து செய்தல்; 2021ல் முதல்வர் அறிவித்த, கொரோனா ஊக்கத்தொகையை, விடுபட்ட அனைவருக்கும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில தலைவர் மணிவண்ணன், இணை செயலர் ரமேஷ்குமார் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: தலைவர்கள் சொல்வது என்ன?
-
அது ஒரு அர்த்தமில்லாத கூட்டம்: முதல்வர் நடத்திய கூட்டம் பற்றி சீமான் விமர்சனம்
-
பாளையம் அண்ணா
-
ஆக்ஸ்போர்டு பல்கலை செல்லும் மம்தா: பெருமைக்குரிய விஷயம் என்கிறார் கவர்னர்
-
ரஹானே - நரேன் அதிரடி; கோல்கட்டா அணி மளமளவென ரன் குவிப்பு
-
எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரித்தாலே போதும்; பி.ஆர்.எஸ்., கட்சி
Advertisement
Advertisement