ஆக்ஸ்போர்டு பல்கலை செல்லும் மம்தா: பெருமைக்குரிய விஷயம் என்கிறார் கவர்னர்

கோல்கட்டா: முதல்வர் மம்தா பானர்ஜி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு ஆற்றச்செல்வது பெருமைக்குரிய விஷயம் என்று மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் கூறினார்.
மார்ச் 24ம் தேதி லண்டன் செல்லும் முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய தூதரகத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு, மார்ச் 25ம் தேதி வர்த்தகர்களை சந்திக்க உள்ளார். 26ம் தேதி வர்த்தக கூட்டத்தில் கலந்து கொள்வதுடன், 27ம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். 28ம் தேதி லண்டனில் இருந்து கோல்கட்டாவுக்கு திரும்புவார்.கடந்த 2015ம் ஆண்டு மம்தா பானர்ஜி பிரிட்டன் சென்ற நிலையில், தற்போது மீண்டும் செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோல்கட்டாவில் சிஐஐ கூட்டத்தில் கலந்து கொண்ட கவர்னர் ஆனந்த போஸ் அளித்த பேட்டி:
வங்கத்திற்கு ஏதாவது நல்லது நடந்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முதல்வர் ஆக்ஸ்போர்டுக்குச் செல்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
மம்தா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் செல்வது பெருமைக்குரிய விஷயம். மாநிலத்திற்கு நல்லது நடக்கும் போதெல்லாம், அது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது.
இவ்வாறு கவர்னர் ஆனந்த போஸ் கூறினார்.
மேற்குவங்க முதல்வரும், கவர்னரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு வந்த நிலையில், இப்போது கவர்னர் இப்படி கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.








மேலும்
-
நீதிபதி வீட்டில் சாக்கு மூட்டையில் பணம்; சுப்ரீம் கோர்ட் செயலுக்கு வக்கீல் உஜ்வால் நிகம் பாராட்டு
-
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தான் தி.மு.க. அரசுக்கு முக்கியமா; ராமதாஸ் கேள்வி
-
ராஜஸ்தான் பந்துவீச்சு; இம்பேக்ட் வீரராக களமிறங்கும் சஞ்சு சாம்சன்
-
மனரீதியாக பாதிக்கபட்டுள்ள நிதிஷ் குமார் பதவி விலகணும்; பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்
-
கையில் ஈரம், செல்போனுக்கு சார்ஜ்: பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலி
-
பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு