காங்கிரசை சீரமைக்கும் பிரியங்கா; மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம்

சென்னை : மாவட்டத் தலைவர்கள், சுயமாக முடிவெடுக்க, அதிகாரம் வழங்குவது குறித்து, டில்லியில் மூன்று நாட்கள் நடக்க உள்ள, 750 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், காங்கிரஸ் மேலிடம் ஆலோசிக்க உள்ளது.
படுதோல்வி
லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருந்தாலும், டில்லி, மஹராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு படுதோல்வி ஏற்பட்டது.
எனவே, கட்சியில் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கவும், சட்ட விதிகளை மாற்றி அமைக்கவும், காங்கிரஸ் டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுதும் கட்சியை பலப்படுத்த, பொதுச்செயலர் முகுல் வாஸ்னிக் தலைமையில், பிரியங்கா, மீனாட்சி நடராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பரிந்துரைத்த பணிகளை, மாவட்டத் தலைவர்களுக்கு வழங்கி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதல் அதிகாரம்
வரும் 26, 27, ஏப்., 3 ஆகிய தேதிகளில், டில்லியில் உள்ள இந்திரா பவனில், நாடு முழுதும் இருந்து, 750 மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.
வரும் 27ம் தேதி தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடக்க உள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா தலைமையிலான காங்கிரசில், மாவட்டத் தலைவர்களுக்கு, கூடுதல் அதிகாரம் இருந்தது.
அதேபோல், தன்னாட்சி அதிகாரம், சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்குவது குறித்து தற்போதைய காங்., கட்சி மாவட்டத் தலைவர்களுக்கும் அதிகாரம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
கூடவே, வேட்பாளர்களை தேர்வு செய்யும், மத்தியக் குழு கமிட்டியில், மாவட்டத் தலைவர்கள் இடம் பெறுவது குறித்தும், அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
காங்., கட்சியின் பொதுச்செயலராக இருக்கும் பிரியங்கா, கட்சியை சீரமைக்கும் பணியை முழு வேகத்தில் செய்கிறார். அதில் ஒரு அங்கமாகத்தான், மாவட்டத் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்த ஆலோசனை என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


மேலும்
-
டில்லி ஐகோர்ட் நீதிபத வீட்டில் பணம்: விசாரிக்க 3 பேர் குழு அமைப்பு
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: தலைவர்கள் சொல்வது என்ன?
-
அது ஒரு அர்த்தமில்லாத கூட்டம்: முதல்வர் நடத்திய கூட்டம் பற்றி சீமான் விமர்சனம்
-
பாளையம் அண்ணா
-
ஆக்ஸ்போர்டு பல்கலை செல்லும் மம்தா: பெருமைக்குரிய விஷயம் என்கிறார் கவர்னர்
-
கேப்டன் ரஹானே சரவெடி; பெங்களூருவுக்கு 175 ரன்கள் இலக்கு