விழிநீர் அழுத்த நோய் விழிப்புணர்வு முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிநீர் அழுத்த நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வட்டார மருத்துவ அலுவலர் பால தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். டாக்டர் சுரேஷ் முன்னிலை வகித்தார். வட்டார கண் மருத்துவ உதவியாளர் ஷகிலா, கண்ணில் ஏற்படும் விழிநோய் குறித்து விளக்கி பேசினார்.

இதில், 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், விழிநீர் நோயால் பாதிக்க வாய்ப்புள்ளதால், ஆண்டிற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 50க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் டாக்டர் முகமதுஜிலானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டாக்டர் அகத்தியா நன்றி கூறினார்.

Advertisement