பூக்கள் விலை சரிந்தது வியாபாரிகள் கவலை

திருப்பூர் திருப்பூர் பூ மார்க்கெட்டில், பூக்கள் விலை சரிந்துள்ளது.

திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு நேற்று, இரண்டு டன் மல்லிகை பூ விற்பனைக்கு வந்தது. 250 கிராம், 80 ரூபாய், ஒரு கிலோ, 300 ரூபாய், ஐந்து கிலோ, 1,300 ரூபாய்க்கு விற்றது. முல்லை பூ வரத்து குறைவாக இருந்தாலும், மல்லிகை பூ விலை குறைவால், முல்லை, கிலோ, 350 ரூபாய்க்கு விற்றது.

மல்லிகை, முல்லை இரண்டு பூ விலையும் குறைந்ததால், மற்ற பூக்களின் விலையும் குறைந்தது. செவ்வந்தி கிலோ, 200, அரளி, 250 ரூபாய்க்கு விற்றது.

பூ வியாபாரிகள் கூறுகையில், 'சத்தியமங்கலம், புளியம்பட்டி, ஓசூர், சேலம், திண்டுக்கல் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து பூ வரத்து அதிகமாகியுள்ளது.

பங்குனி மாத பிறப்புக்கு பின் முகூர்த்த தினங்கள் குறைவு. தொடர்வது தேய்பிறை நாட்கள் என்பதால், பூ விற்பனையும் குறைவு. வரத்து அதிகமாகியுள்ள நிலையில், விற்பனையும் குறைந்துள்ளதால், தற்போதைக்கு விலை உயர்வு இல்லை,' என்றனர்.

Advertisement