தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்

17

சென்னை: தி.மு.க., அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடியுடன் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டார்.


@1br'தி.மு.க., அரசை கண்டித்து இன்று (மார்ச் 22) கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடக்கும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, தி.மு.க., அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.


சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடியுடன் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டார்.




சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:

தமிழக மக்களின் நலனை காக்கவே கருப்புக்கொடி போராட்டம். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசு உறுதி அளித்த பின்பும் நம்ப மறுப்பது ஏன்?


கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் தேவையற்றது. மேகதாது அணை கட்டுவதாக கூறும் சிவக்குமாருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement