இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 'கூட்டாட்சியின் கட்டமைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தி.மு.க., கூறி வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டியில், தொகுதி மறு வரையறை தொடர்பாக கூட்டு நடவடிக்கை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்வர்கள் மற்றும் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
நியாயமான தொகுதி வரையறை
முன்னதாக, கூட்டம் தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: கூட்டத்திற்கு வருகை தந்த முதல்வர்கள், அரசியல் தலைவர்களை அன்புடன் வரவேற்கிறேன். கூட்டாட்சியின் கட்டமைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்
கூட்டாட்சி தத்துவத்தை காக்க உறுதி கொள்வோம். தேசத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்கள் நியாயமான தொகுதி வரையறையை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்து உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.










மேலும்
-
குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் போர்மேன் மரணம்
-
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு!
-
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதி இழப்பதை ஏற்க முடியாது: காங்கிரஸ்
-
மறுவரையறையை ஒத்திவைக்க கோரும் தீர்மானம்; பிரதமரிடம் நேரில் அளிப்போம்: கனிமொழி
-
எங்கள் எதிர்காலத்தின் மீதான தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின்
-
தொகுதி மறுசீரமைப்புக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்? யார்?