மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதி இழப்பதை ஏற்க முடியாது: காங்கிரஸ்

23

புதுடில்லி: 'மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதிகளை இழப்பதை ஏற்க முடியாது' என காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.



தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், தொகுதி மறுசீரமைப்பு செய்ய முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?
தொகுதி மறுசீரமைப்பு அவசியமென்றாலும், மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையக்கூடாது.


மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதிகளை இழப்பதை ஏற்க முடியாது.
குடும்பக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட உள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement