தேனியை குளிர்வித்த மழை

தேனி : தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பகலில் ரோட்டில் செல்வதே சிரமமாக இருந்தது. குழந்தைகள், முதியவர்களுடன் வெளியில் செல்பவர்கள் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் தேனி நகர் பகுதியில் கருமேகங்கள் சூழந்து காட்சியளித்தனர். திடீரென மதியம் 3:15 மணியளிவில் மழை பெய்ய துவங்கியது சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் கனமழை பெய்ததது. இதனால் குளுமையான சூழல் நிலவியது. பல இடங்களில் சாக்கடைகள் துார்வாராததால் ரோட்டில் மழைநீருடன், சாக்கடை நீர் செல்லும் நிலை ஏற்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ராஜவாய்க்கல் துார்வாரும் பணி நடைபெறும் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் மதுரை ரோடு, கம்பம் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெரியகுளத்தில் நேற்று மதியம் 2:30 மணிக்கு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 4:00 மணிக்கு சாரல் மழையும் அதனை தொடர்ந்து அரை மணிநேரத்தில் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது.
மேலும்
-
பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்
-
நீதிபதி வீட்டில் பணம் விவகாரம் எதிரொலி; அமளியால் பார்லிமென்ட் ஒத்திவைப்பு
-
தியானத்திற்கும் ஹிப்னாடிஸத்திற்கும் என்ன வித்தியாசம்?
-
ஜி.வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து கோரி மனு தாக்கல்
-
எதிர்க்கட்சி அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தி.மு.க., கொடியை அகற்ற தலைமை உத்தரவு; அகற்றிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!