சுனிதா வில்லியம்சுக்கு கூடுதல் சம்பளமா: டிரம்ப் என்ன சொல்கிறார்

வாஷிங்டன்: விண்வெளி சென்று 9 மாதங்களுக்கு பிறகு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா என்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்து உள்ளார்.
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கி இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59) மற்றும் புட்ச் வில்மோர்(62) ஆகியோர் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் கடந்த 19ம் தேதி பூமிக்கு திரும்பினார்.
சம்பளம்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மர், அமெரிக்க அரசின் ஊழியர்களுக்கான பொது பட்டியலில் மிகவும் உயர்ந்த நிலையான, ஜி.எஸ்., - 15 என்ற நிலையில் உள்ளனர். தற்போது பூமிக்கு திரும்பும் அவர்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 286 நாட்கள் விண்வெளியில் இருந்த அவர்களுக்கு கூடுதலாக தலா ரூ.1,22,989 பணமும், அதனுடன் சம்பளமாக ரூ.82 லட்சம் முதல் ரூ.1.06 கோடி வரை கிடைக்கும் என தகவல் வெளியானது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: அவர்களின் சாதனைக்கு இது பெரிய விஷயம் கிடையாது. அவர்களுக்கான சம்பளம் குறித்து என்னிடம் யாரும் கூறவில்லை. அப்படி கூறியிருந்தால், நான் எனது சொந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (5)
சண்முகம் - ,
22 மார்,2025 - 21:26 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22 மார்,2025 - 19:32 Report Abuse

0
0
Reply
Appa V - Redmond,இந்தியா
22 மார்,2025 - 19:23 Report Abuse

0
0
Reply
Saamaanyan - Singapore,இந்தியா
22 மார்,2025 - 18:43 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
22 மார்,2025 - 18:42 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்
-
9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஐ.பி.எம்.,
-
வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்?
-
கார் விபத்தில் காயங்களுடன் தப்பினார் நடிகர் சோனு சூட் மனைவி!
-
அண்ணனை கொல்ல முயன்ற தங்கை குடும்பத்துக்கு தண்டனை
-
ரயிலில் மது பாட்டில் கடத்தியவர் கைது: திண்டுக்கல் வழியாக அதிகரிக்கும் கடத்தல்
Advertisement
Advertisement