9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஐ.பி.எம்.,

11


வாஷிங்டன்: அமெரிக்காவில் 9 ஆயிரம் பேரை பணியில் இருந்து ஐ.பி.எம்., நிறுவனம் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அர்மாங்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ஐ.பி.எம்., நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகின் முன்னணி நிறுவனமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.


பல்வேறு மென்பொருள் மற்றும் கணினி சார்ந்த நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், ஐ.பி.எம்., நிறுவனமும் அமெரிக்காவில் 9 ஆயிரம் பேரை பணியில் இருந்து விடுவித்து உள்ளது. கலிபோர்னியா, டெக்சாஸ், டல்லாஸ், நியூயார்க் நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றியோர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.


'கன்சல்டிங், கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி, கிளவுட் உள்கட்டமைப்பு, விற்பனை மற்றும் ஐடி அமைப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவர்கள் தான் , இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளனர்.

Advertisement