உத்திரமேரூர் ஒன்றியத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு

உத்திரமேரூர், மார்ச் 23--

-உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, அரும்புலியூர், காவித்தண்டலம், திருமுக்கூடல், காவணிப்பாக்கம் ஆகிய கிராமங்களில், 2024 --- 25ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் கனிமவள நிதியின் கீழ், 1.22 கோடி ரூபாய் செலவில் ஊராட்சி அலுவலக கட்டடங்கள், கிளை நூலக கட்டடம், ரேசன் கடை கட்டடம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன.

புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார். இதில், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, ஒன்றிய தி.மு.க., செயலர் குமார், காவித்தண்டலம் ஊராட்சி தலைவர் இந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement