பொன் முட்டையிடும் வாத்து இடுக்கி: கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்

2

மூணாறு : ''கேரள மாநில சுற்றுலாவில் இடுக்கி மாவட்டம் பொன் முட்டையிடும் வாத்து,'' என, இடுக்கி மாவட்டம் பீர்மேட்டில் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.


பீர்மேட்டில் முற்றிலும்தேக்கு மரத்தடிகள் கொண்டு அமைக்கப்பட்ட எக்கோ தங்கும் விடுதி, புதுப்பிக்கப்பட்ட விருந்தினர் மாளிகை ஆகியவற்றை அமைச்சர் முகம்மதுரியாஸ் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.


பின் அவர் கூறியதாவது: இம்மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து வருகிறது. சிறந்த ரோடுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன. கொரோனாவுக்குப் பிறகு இடுக்கி, வயநாடு ஆகிய பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.


தற்போது கேரளாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், மத்திய கிழக்கு நாடுகளைச்சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகிறனர். அதுபோன்று மலேஷியா, சீனா, ஜப்பான்,நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு 'மலேசியன் ஏர்லைன்ஸ்'உடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் சுற்றுலாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Latest Tamil News
இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா, வனம் ஆகிய துறைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைவில்தீர்வு காணப்படும். அதற்கு எம்.எல்.ஏ.,க்களுடன் வனத்துறை அமைச்சர் மார்ச் 24ல் (இன்று) பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்றார்.

Advertisement