ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை: தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஸ்ரீநகர்; ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.



ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹிரா நகர் பகுதியில் உள்ள சன்யால் என்ற கிராமத்தில் அதிரடியாக தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் இறங்கினர்.


அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.


இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், ஹிரா நகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அவர்களை பிடிக்கச் சென்ற போது தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது. கூடுதல் தகவல்களுக்காக காத்திருக்கிறோம் என்று கூறினர்.

Advertisement