3 கேமரா பொருத்தி வனத்துறை 'ரோந்து'

மேட்டூர்: கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி கத்திரிப்பட்டி, வன்னியர் நகரை சேர்ந்த விவசாயி மணி, 40. அவரது வளர்ப்பு நாயை நேற்று முன்தினம் மர்மவிலங்கு கடித்து கொன்றது. கடந்த, 10 நள்ளிரவு, அருகே உள்ள கோவிந்தபாடி, நாகேஸ்வரி அம்மன் கோவில் அருகே விவசாயி மாரியப்பனின், 4 ஆடுகளை மர்மவிலங்கு கடித்து கொன்றது.

ஆடுகளை கொன்றது, நாய்களாக இருக்கக்கூடும் என மேட்டூர் வனத்துறையின் சந்தேகித்தனர். இந்நிலையில் நாயை கொன்றதால், சிறுத்தை அல்லது வேறு விலங்கு முகாமிட்டிருக்கலாம் என, வனத்துறையினர் கருதினர். தொடர்ந்து நேற்று இரவு, கொளத்துார் வனவர் கோபால், வனகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் நாய் செத்து கிடந்த பகுதியில், 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். அடுத்த கட்டமாக டிரோன் மூலம் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisement