டீ மாஸ்டரை கொல்ல முயன்ற நண்பர்கள் கைது

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், கணேசபுரத்தை சேர்ந்த டீ மாஸ்டர் செம்மலை, 29. இவரது நண்பர்கள், ஏத்தாப்பூரை சேர்ந்த செல்வராஜ், 29, விஜயகுமார், 43, புத்திரகவுண்டன்பாளையம் கார்த்திக், 32. இவர்கள் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, ஏத்தாப்பூர் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் செம்மலையை, 3 பேரும் சேர்ந்து தாக்கினர். தொடர்ந்து, 'ஹாலோ பிரிக்ஸ்' கல்லை எடுத்து தலையில் போட்டனர். படுகாயம் அடைந்த செம்மலையை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, செல்வராஜ், விஜயகுமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement