சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்

சேலம்: சேலம், சாமிநாதபுரம் சமயபுரம் மாரியம்மன், சூலி மகா காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, பூச்சாட்டுதல் வைபவம் நேற்று நடந்தது. அதில் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து ரத்தின ஆபரணங்கள் அணிவித்து பூஜை நடந்தது.

பின் பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால், அம்மனுக்கு பூச்சாட்டுதல் வைபவம் நடந்தது. பின் தீபாராதனை காட்டப்பட்டது. ஏப்., 4ல் பால்குட ஊர்வலம் நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகி தெரிவித்தார்.

Advertisement