திருமணம் செய்ய மறுத்த பெண் தனிமை வீடியோ வெளியிட்ட போலீஸ்காரர் கைது

குன்றத்துார்: மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், ராஜராஜன் நகரில் வசிப்பவர் ஆனந்த், 38; கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலர்.
மனைவியை விவகாரத்து செய்த நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அந்த பெண்ணுடன் ஆனந்த் நெறுங்கி பழகிய நிலையில், அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால், ஆனந்தை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதனால், மன உளைச்சலில் இருந்த ஆனந்த், போதையில் குடியிருப்பு பகுதி வீடுகளின் கதவுகளை உடைத்து ரகளை செய்வதாக கூறப்படுகிறது.
இரவில் பெண்கள் இருக்கும் வீடுகளின் கதவை தட்டி, அரை நிர்வாணமாக நின்று தொல்லை தருவதாக, அவர் மீது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மாங்காடு போலீசார் கடந்த மாதம், ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனந்த் பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளியே வந்த ஆனந்த், தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கடி கொடுத்துள்ளார்.
அந்த பெண் மறுக்கவே, ஆனந்துடன், அந்த பெண் தனிமையில் இருந்த புகைப்படம், வீடியோ பதிவுகளை, பெண்ணின் உறவினர்களின் மொபைல் போனுக்கு அனுப்பி உள்ளார்.
இதானல் அதிர்ச்சியடைந்த அப்பெண், போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆனந்தை போலீசார் நேற்று மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!