போதை மாத்திரை விற்பனை பெண் உட்பட மூவர் கைது

திருச்சி:திருச்சி, பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக புகார்கள் சென்றதையடுத்து, பாலக்கரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு, குட்ஷெட் பகுதியில் சந்தேகப்படும்படியாக இருந்த பெண் உட்பட மூவரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் அப்பகுதியில் போதை மாத்திரைகள் விற்றது தெரிய வந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 25, இந்திராணி, 50, சஞ்சய்குமார், 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், திருச்சி, செந்தண்ணீர்புரம் அருகே மெடிக்கல் வைத்துள்ள கோதண்டபாணி, 33, என்பவரிடம் போதை மாத்திரைகள் வாங்கியதாக தெரிவித்தனர்.

கோதண்டபாணி மெடிக்கலில் விற்பனைக்கு வைத்திருந்தது உட்பட, 15,000 போதை மாத்திரைகள், இரு தரப்பினரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் பெரும்பாலும், பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறிவைத்தே மாத்திரைகளை விற்பனை செய்ததும், இந்த மாத்திரைகள் ஹரியானாவில் இருந்து கோதண்டபாணிக்கு வந்ததும், அவற்றை சில்லரையில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement