திருப்பதி தரிசனத்திற்கு ரூ.10 ஆயிரம் இழந்த நபர்

புதுச்சேரி: திருப்பதி தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து, ரூ. 10 ஆயிரத்தை புதுச்சேரி நபர் இழந்துள்ளார்.

புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் முத்துராமன். இவர் திருப்பதி தரிசனத்திற்கான ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்ய தேடியுள்ளார். அப்போது, முத்துராமனை தொடர்பு கொண்ட மர்ம நபர், டிக்கெட் புக்கிங் செய்ய முன்பணம் செலுத்தும்படி கூறியுள்ளார்.

இதைநம்பிய முத்துராமன், மர்ம நபருக்கு 9 ஆயிரத்து 900 ரூபாய் செலுத்தியுள்ளார். அதன்பின், மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேபோல், பல்வேறு காரணங்களுக்காக தேங்காய்திட்டை சேர்ந்த தீபக் 17 ஆயிரம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சோழன் 5 ஆயிரத்து 200, லாஸ்பேட்டை சேர்ந்த கவிதா 9 ஆயிரம் என 4 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 41 ஆயிரத்து 100 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement