4வது குழந்தைக்கு "ஹிந்த்" என பெயரிட்டார் துபாய் பட்டத்து இளவரசர்

துபாய்: துபாய் பட்டத்து இளவரசரான ஷே க் ஹம்தான், தனக்கு பிறந்த 4வது பெண் குழந்தைக்கு "ஹிந்த்" என பெயர் சூட்டி, அதை சமூகவலைதளத்தில்(இன்ஸ்டாகிராம்) பதிவிட்டுள்ளார்.
ஷேக் ஹம்தான் 2008 ல் துபாயின் இளவரசரானார்.அவர் மேலும் ஐக்கிய அமீரக துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். இவர் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் ஆகியோரின் இரண்டாவது மகனாவார்.
இந்நிலையில் இவருக்கும் அவரது மனைவியான ஷேகா ஷீக்கா பின்தே சைத் அல் மக்தூம் ஆகியோருக்கு நான்காவது குழந்தை பிறந்துள்ளது. புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு 'ஹிந்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஷேக் ஹம்தானுக்கு ஏற்கனவே ராஷிதா, ஷெய்கா மற்றும் முகமது என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது 4வது பெண் குழந்தை பிறந்துள்ளது.
'ஹிந்த்' என்பது அரபு பாரம்பரியத்தில் ஒரு பிரபலமான பெண் பெயர் என்றும் இது வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.
ஷேக் ஹம்தான் தனது சமூக பதிவில் குழந்தையின் பிறப்பை குறிப்பிட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர் இளவரசருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.








மேலும்
-
அரசை விமர்சித்த வெளிநாட்டு மாணவர்கள்... வெளியேறுங்கள்!:விசாக்களை ரத்து செய்து டிரம்ப் அரசு அதிரடி; பதிவுக்கு 'லைக்' போட்டவர்களுக்கும் சிக்கல்
-
எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு ஒருவர் பலி; ஏழு பேர் படுகாயம்
-
தேசிய பாதுகாப்பு ஆலோசகரை மாற்ற அமெரிக்க அதிபர் ஆலோசனை
-
கடைசி ஓவரில் சென்னை தோல்வி: ராஜஸ்தான் அணி முதல் வெற்றி
-
இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பிரதமர் மோடி புகழாரம்
-
ஹிமாச்சல் நிலச்சரிவு 6 பேர் உயிரிழப்பு