தொழிலாளர் துறை வளாகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
புதுச்சேரி: புதுச்சேரிதொழிலாளர் துறை, வேலை வாய்ப்பக வளாகத்தில் நாளை ( 26ம் தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து தொழிலாளர் துறை இயக்குநர் யாசம் லஷ்மி நாராயண ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை வேலை வாய்ப்பகம் சார்பில் நாளை (26ம் தேதி) காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பகம் வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
முகாமில், 1000க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக 10க்கும் மேற்பட்ட புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பங்கு பெறலாம்.
முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது சுயவிபரம் மற்றும் கல்வித் தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன் பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கால்பந்து: சேது அணி வெற்றி
-
மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு
-
எலான் மஸ்க் பெயரில் ரூ.75 லட்சம் மோசடி; ஓய்வு பெற்ற பைலட் கண்ணீர்
-
ராகுல் கும்பமேளாவிற்கு செல்லாதது ஏன்: ராபர்ட் வாத்ரா சொல்வது இதுதான்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: ஐதராபாத் அணி 190 ரன்கள் குவிப்பு
-
நெதர்லாந்தில் கத்தி குத்து தாக்குதல்: 5 பேர் காயம்