கால்பந்து: சேது அணி வெற்றி

சென்னை: இந்திய பெண்கள் லீக் (ஐ.டபிள்யு.எல்.,) கால்பந்து போட்டியில் சேது எப்.சி., அணி 3-1 என, ஒடிசா அணியை வீழ்த்தியது.
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் பெண்கள் லீக் 8வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, சேது எப்.சி., அணிகள் மோதின. சேது எப்.சி., அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சேது எப்.சி., அணிக்கு அம்னா நபாபி (7, 13வது நிமிடம்), மூசா ஜூவைராடோ (41வது) கைகொடுத்தனர். ஒடிசா அணிக்கு லிண்டா கோம் (90+6வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.


இதுவரை விளையாடிய 10 போட்டியில், 4 வெற்றி, ஒரு 'டிரா', 5 தோல்வி என 13 புள்ளிகளுடன் சேது எப்.சி., அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. ஒடிசா அணி 11 புள்ளிகளுடன் (3 வெற்றி, 2 'டிரா', 5 தோல்வி) 6வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் ஈஸ்ட் பெங்கால் (27 புள்ளி), கோகுலம் கேரளா (23) அணிகள் உள்ளன.

Advertisement