திருநெல்வேலி ஓய்வு எஸ்.ஐ., கொலை விவகாரம் அறிக்கை கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்
திருநெல்வேலி:திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ.,ஜாஹிர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மனித உரிமை மீறல் ஏற்பட்டதா என தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இதில் டி.ஜி.பி., மற்றும் திருநெல்வேலி கலெக்டர் நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி டவுனை சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் 60. கடந்த 18ம் தேதி காலையில் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அவர் அங்குள்ள தைக்கா எனப்படும் முஸ்லிம் மத வழிபாட்டுத்தலத்தின் நிர்வாகியாக இருந்தார். அந்த தைக்காவுக்கு சொந்தமான வக்பு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துவருவதாக தொடர்ந்து புகார் அளித்துவந்தார். அந்த நிலத்தை கையகப்படுத்த முயன்ற அதே பகுதியை சேர்ந்த நுார்னிஷா, அவரது கணவர் தவ்பீக் (எ) கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், அவரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொலை தொடர்பாக ஏற்கனவே தவ்பீக் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜாஹிர் உசேன் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத, டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் டவுன் உதவி கமிஷனர் செந்தில் குமார் ஆகியோர் ‛சஸ்பெண்ட்'செய்யப்பட்டனர்.
இதற்கிடையே தேசிய மனித உரிமை ஆணையம், இந்தக் கொலை சம்பவம் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தானாக முன் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஜாஹிர் உசேன், வக்பு நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளில் ஈடுபட்டிருந்தவர். போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதால், இந்த விவகாரம் குறித்து தமிழக டி.ஜி.பி.,யும், திருநெல்வேலி கலெக்டரும் நான்கு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்
-
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் டிஸ்மிஸ்
-
பெண்கள் கால்பந்தில் சேது அணி அபாரம்.
-
பிரிமீயர் லீக் தொடர்: ஐதராபாத் அணி பேட்டிங்
-
பஸ்சில் தவறி விழுந்த மாணவி காயம்:அரசு பஸ் ஊழியர்கள் பணி நீக்கம்
-
மருத்துவப் பயிற்சி மாணவி மீது பாலியல் தாக்குதல்; சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் என சீமான் காட்டம்
-
டாஸ்மாக் மதுக்கடையில் தகராறு: உசிலம்பட்டி போலீஸ்காரர் அடித்துக்கொலை!