பஸ்சில் தவறி விழுந்த மாணவி காயம்:அரசு பஸ் ஊழியர்கள் பணி நீக்கம்

1

கடலுார்: கடலுாரில் அரசு பஸ் மாணவி இறங்குவதற்குள் பஸ்சை எடுத்து, அவர் தவறி விழ காரணமான டிரைவர், கண்டக்டர் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் இருந்து சென்ற அரசு பஸ்சில் பயணித்த முதலாம் ஆண்டு மாணவி, தீயணைப்பு நிலையம் பஸ்ஸ்டாப்பில் இறங்க முயற்சித்தார்.

இறங்குவதற்குள் பஸ்சை டிரைவர் கிளப்பியதால், மாணவி தடுமாறி கீழே விழுந்தார். தலையில் காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணை நடத்திய அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், தற்காலிக ஊழியர்களான அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரும் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தனர்.

Advertisement