ரம்ஜான் பண்டிகை எதிரொலிரூ.3 கோடிக்கு மாடு விற்பனை


ரம்ஜான் பண்டிகை எதிரொலிரூ.3 கோடிக்கு மாடு விற்பனை


புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், தாங்கள் வளர்த்த மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, ரம்ஜான் பண்டிகை எதிரொலி காரணமாக, மாடுகளை வாங்கிச்செல்ல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர். மேலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்ததால், மாடு விற்பனை அதிகரித்து, மூன்று கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement