சத்தீஸ்கரில் நக்சல்கள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

5


ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 2 பேர் காயம் அடைந்தனர்.



இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisement