வாகன ஓட்டிக்கு 'பைன்'




வாகன ஓட்டிக்கு 'பைன்'

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் உமா, நேற்று பரமத்தியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரே பைக்கில் மூவர், 'ஹெல்மெட்' அணியாமல் சென்றனர். அவர்களை பார்த்த கலெக்டர் உமா, நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ.,விற்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து, ஆர்.டி.ஓ., முருகேசன், குறிப்பிட்ட அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அங்கு, போக்குவரத்து போலீசார், வாகன உரிமையாளருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement