அரசு பள்ளியில் ஆண்டு விழா

புதுச்சேரி: வில்லியனுார் பெரியபேட் அரசு தொடக்கப் பள்ளியில், ஆண்டு விழா நடந்தது.

விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ரேணுகா வரவேற்றார். எம்.எல்.ஏ., சிவா தலைமை தாங்கினார். வட்டம்-4, பள்ளித்துறை ஆய்வாளர் அமல்ராஜ் லீமாஸ், தமிழ்ச்சங்க செயலாளர் சீனுமோகன்தாஸ், கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருவரசன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

தொடர்ந்து, மாணவர்களின் பாட்டு, கவிதை, நடனம், வில்லுப்பாட்டு, பேச்சு, யோகா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மணிமாறன், வெங்கடேசன், கிரிஜா, லட்சுமிகாந்தா, சுமதி மற்றும் பள்ளி ஊழியர் அமுதா ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement