ஷைன் 100 ஹோண்டாவின் 'மைலேஜ் மாஸ்டர்'

'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், அதன் 'ஷைன் 100' பைக்கை புதுப்பித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக்கின் விலை, 2,000 ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்த பைக், 'ஒ.பி.டி., 2டி' உமிழ்வு விதிமுறைக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய பைக்குடன் ஒப்பிடுகையில், டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், பெட்ரோல் டேங்க் மற்றும் இதர பக்கவாட்டு பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை, கருப்பு, தங்கம் கலப்பு நிறத்திற்கு பதிலாக கருப்பு, ஆரஞ்ச் கலப்பு நிறத்தில் வந்துள்ளது. 'ஷைன் 100' என்ற புதிய அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.

இதில், அதே 98.98 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் மற்றும் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வந்துள்ளளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 65 கி.மீ., வரை மைலேஜ் தருகிறது. முன்புற டெலிஸ்கோப்பிக் மற்றும் பின்புற டூயல் ஷாக் அப்சார்பர் சஷ்பென்ஷன்கள், டிரம் பிரேக்குகள், 168 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், 786 எம்.எம்., சீட் உயரம், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 9 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவை உள்ளன. இந்த பைக், மொத்தம் ஐந்து நிறங்களில் கிடைக்கின்றன.

விலை: ரூ. 69,000




விபரக்குறிப்பு



இன்ஜின் - 98.98 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு

பவர் - 7.28 ஹெச்.பி.,

டார்க் - 8.04 என்.எம்.,

மைலேஜ் - 65 கி.மீ.,

எடை - 99 கிலோ


டீலர்: KUN HONDA - 99416 11777

Advertisement