வாட்ஸ் ஆப் குழுவில் பெண்கள் குறைகளை பதிவிடலாம்

ஊட்டி: ரயில் பயணத்தின்போது வாட்ஸ் ஆப் குழுவில் பெண்கள் தங்களது குறைகளை பதிவிட்டால் அதை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். என, தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ரயில்வே போலீசார் சார்பில் ரயில் பெண் பயணியர் பாதுகாப்பு குழு தொடக்க விழா மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஊட்டியில் நடந்தது.
ஊட்டி டவுன் டி.எஸ்.பி., நவீன்குமார் தலைமை வகித்தார்.
கோவை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி பேசுகையில், '' ரயில்வே போலீசார் சார்பில் பெண் பயணிகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின்போது பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள் பாதுகாப்பாக தங்கள் உடமைகளுடன் பயணம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு வட்டத்தில் உள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்களில், வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில், அனைத்து துறையில் உள்ள பெண்கள் முக்கியமாக சமூக ஆர்வலர்கள் இணைக்கப்படுகின்றனர். நீலகிரி மலை ரயிலில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணிகள் பயணிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். '' என்றார்
முகாமில் கல்லூரி மாணவிகள் உட்பட திரளாக பெண்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
வேலைவாய்ப்பை தடுக்கும் சுயநல அரசியல்வாதிகள்: ஸ்டாலினை விமர்சித்த யோகி ஆதித்யநாத்
-
ஜூன் 15ல் குரூப் 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
-
ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; லோகோ பைலட்டுகள் இருவர் உயிரிழப்பு
-
தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!
-
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை தாண்டியது!
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!