தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

கடலுார்: கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புவனகிரியைச் சேர்ந்தவர் வினோத்குமார்,30; மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைக்காக போதை மறுவாழ்வு நல மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.

நேற்று காலை அங்கிருந்து வெளியேறிய அவர் கடலுார் தேவனாம்பட்டிணம் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் மணி, தனிப்பிரிவு ஏட்டு சிவசெந்தில் மற்றும் போலீசார், அவரை காப்பாற்றி, முதலுதவி அளித்து சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement