லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்

புதுடில்லி: வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில் இன்று (ஏப்ரல் 02) மதியம், 12:00 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டடது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், சபையில் விறுவிறுப்பான விவாதம் நடந்து வருகிறது.
பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
பா.ஜ., எம்.பி., ஜெகதாம்பிகா பால் கூட்டுக்குழுவுக்கு தலைமை வகித்தார். முஸ்லிம்கள் தரப்பை மளமளவென அழைத்து ஆலோசனை நடத்தி விரைவாக பணிகளை முடித்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 02) லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மதியம் 12:10 மணிக்கு, பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.
விரிவான ஆலோசனை
பின்னர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: வக்ப் சட்டத்திருத்தத்திற்கு 97 லட்சம் கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளது. பார்லிமென்ட் வரலாற்றில் வேறு எந்த மசோதாவிற்கும் இவ்வளவு விரிவாக ஆலோசனை நடை பெற்றதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மசோதா மீது விறுவிறுப்பான விவாதம் நடந்து வருகிறது. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால் பேசியதாவது: இந்த வக்ப் மசோதாவில் தங்களது கருத்துகளை முன் வைக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நீங்க சட்டத்தையே தகர்க்கிறீர்கள். திருத்தம் செய்ய பல விதிகள் உள்ளன. இதற்கு கருத்து தெரிவிக்க நேரமே அளிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய வகையில் மசோதா அம்சங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அமித்ஷா பதில்
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'பார்லிமென்ட் கூட்டுக்குழு பரிசீலனையில் எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்' என பதில் அளித்தார்.
வக்ப் வாரிய சொத்துக்களை நிர்வகிக்கும் கவுன்சிலில், பெண்களையும் உறுப்பினராக்குவது, வக்ப் சொத்துக்களின் மீதான பிரச்னைகளில் மாவட்ட கலெக்டரே இறுதி முடிவு எடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.











மேலும்
-
2ம் கட்ட மெட்ரோ திட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்யுங்க; ராமதாஸ் வலியுறுத்தல்
-
நீர்நிலையில் குப்பையை கொட்டியதால் வந்த வினை; பின்னணி பாடகருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
-
உங்கள் நாடகத்துக்கு சட்டசபையை பயன்படுத்தாதீர்; முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள்
-
மருதமலை அடிவார தியான மண்டபத்தில் வெள்ளிவேல் திருட்டு; வெளியானது சி.சி.டி.வி., காட்சி
-
சமைக்காத கோழிக்கறி சாப்பிட கொடுத்த பெற்றோர்: 2 வயது குழந்தை உயிரிழப்பு
-
கிராம சுகாதார செவிலியர் பணி விவகாரம்; அரசுக்கு சீமான் கடும் கண்டனம்