விஜயமங்கலம் பகுதி மின் இணைப்புநிர்வாக காரணத்தால் பிரித்து மாற்றம்


விஜயமங்கலம் பகுதி மின் இணைப்புநிர்வாக காரணத்தால் பிரித்து மாற்றம்


ஈரோடு:பெருந்துறை மின் கோட்ட நிர்வாக காரணத்தால், விஜயமங்கலம் பிரிவுக்கு உட்பட்ட கினிப்பாளையம் பகிர்மானம், விஜயமங்கலம் பகிர்மானத்துக்கு உட்பட்ட கோவில்பாளையம் கினிப்பாளையம், மேட்டுப்புதுார் ஆகிய பகுதிகளில் அதிக மின் இணைப்புகள் உள்ளன.
இதில், 1,126 மின் இணைப்புகள் குள்ளம்பாளையம் பிரிவு அலுவலகத்துக்கும், கினிப்பாளையம் பகிர்மானத்துக்கு உட்பட்ட கிரே நகர், கரட்டூர், மஞ்சசோளக்காடு பகுதியில் இருந்து, 330 மின் இணைப்புகள் திங்களூர் பிரிவு அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டது.
தாசம்பாளையம் பகிர்மானத்துக்கு உட்பட்ட தாசம்பாளையம், கொங்கம்பாளையம், அரசானமலை பகுதியில் இருந்து, 510 மின் இணைப்புகள், சிப்காட்டு பிரிவு அலுவலகத்துக்கு வரும் ஏப்., 1 முதல் மாற்றம் செய்யப்படுகிறது, என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Advertisement