மசோதாவை தயாரித்தது யார்? அதிரடி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்

எதிர்க்கட்சி துணை தலைவரான காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் பேசியதாவது:
இந்த மசோதா, நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது. மதம் சார்ந்த விஷயங்களில், அரசு தலையிடுவதை இது உறுதி செய்கிறது. இந்த மசோதாவை, சிறுபான்மையினர் நலத்துறை தான் தயாரித்ததா அல்லது வேறு ஏதாவது துறை தயாரித்து அளித்ததா? எங்கிருந்து இந்த மசோதா வருகிறது?
வேறு எந்த மதத்தை சேர்ந்தவர்களிடமாவது, நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே மதத்தில் இருந்தீர்களா என, உங்களால் கேட்க முடியுமா? பின் எதற்காக, இந்த மசோதாவில் மட்டும் அவ்வாறு கேட்கப்படுகிறது? மத விஷயங்களில், இந்த அரசு தலையிட வேண்டிய அவசியம் என்ன?
அரசியலமைப்பு சட்டத்தை, இந்த மசோதா வாயிலாக அரசு நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. இரண்டாவதாக, சிறுபான்மை சமூகத்தை அவமதிப்பு செய்துள்ளது. மூன்றாவதாக, இந்திய சமூகத்தை பிளவுபடுத்தியுள்ளது.
ஐ.மு., கூட்டணி அரசின் மீது, அமைச்சர் கூறிய கருத்துகள் அனைத்தும் தவறானவை. குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அவர் அளிக்க வேண்டும். உ.பி.,யில் ஆளும் பா.ஜ., அரசு, சாலைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த கூட அனுமதி தரவில்லை. இந்த மனநிலையில் இருக்கும் நீங்கள், முஸ்லிம்கள் மீது இரக்கப்படுவதாக கூறுவதை எப்படி நம்புவது?
பா.ஜ.,வில் சிறுபான்மை சமூகங்களிலிருந்து எத்தனை பேர் எம்.பி.,க்களாக இருக்கின்றனர்? வக்ப் மசோதா வாயிலாக, ஒரு சமூகத்தின் மீது இந்த அரசு குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதே நிலைமை, நாளைக்கு வேறு ஒரு சமூகத்திற்கும் நடக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு கோகோய் பேசினார்.












மேலும்
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி - 104 / 3
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்