நான்கு போலீசார் பலி: தலா ரூ.30 லட்சம் நிவாரணம்

சென்னை:சாலை விபத்தில் இறந்த, எஸ்.ஐ., மற்றும் மூன்று ஏட்டுகள் குடும்பத்திற்கு, தலா 30 லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, பட்டாபிராம் மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., மெர்ஸி; திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் ஏட்டு முத்தையா; தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் ஏட்டு சிவஞானம்; மதுரை மாவட்டம், அவனியாபுரம் ஏட்டு ஆசிக்அகமது ஆகியோர், வெவ்வேறு இடங்களில் நடந்த, சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதை அறிந்த முதல்வர், அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன், தலா 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisement