அரசுப் பள்ளி ஆண்டு விழா

அவிநாசி தாலுகா, கருவலுாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளிக்கு கல்விச்சீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். வட்டார கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

கருவலுார் ரோட்டரி சங்கத் தலைவர் வேலுச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கபில்தேவ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பானுப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement