9 நிர்வாகிகளுடன் அ.தி.மு.க., 'பூத் கமிட்டி'

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், வடக்கு சட்டமன்றத்திற்குட்பட்ட காந்தி நகர் பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா காலனியில் நடந்தது. பகுதி செயலாளர் கருணாகரன் தலைமை வகித்தார். வார்டு செயலாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.

மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், பேசியதாவது:

வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒரு பூத்திற்கு ஒன்பது பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட இந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் வாரத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

நுாறு வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு ஓட்டு சேர்க்க வேண்டும். வெற்றிக்காக பாடுபட வேண்டும்.

திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வரி இனங்களை குறைக்க கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்தோம் வியாபாரிகள் போராட்டம் நடத்தினார்கள்.

அந்த வரியை குறைக்காமல் இன்று உபரி பட்ஜெட் போட்டதாக கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். உபரி பட்ஜெட் என்றால் வரியை குறைத்து இருக்கலாமே!

இவ்வாறு அவர் பேசினார். தொகுதி பொருளாளர் தாமோதரன், எம்.எல்.ஏ., விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement