வீடு புகுந்து பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் தாலி செயின் பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் காட்டுகொட்டாய் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மஞ்சு,23; விவசாய கூலி.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஒன்றரை வயது மகன் மற்றும் மாமியாருடன் வீட்டில் படுத்து துாங்கி கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், 3 பேர், துாங்கி கொண்டிருந்த மஞ்சுவின் கழுத்திலிருந்த 4 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement