பெண் சப் இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று பகல் 1:00 மணியளவில் கோமுகி ஆற்று பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த பைக்கை நிறுத்த முற்பட்டனர்.

அப்போது, பைக்கில் வந்த கோட்டைமேடு சிறுவங்கூர் ரோட்டை சேர்ந்த தர்மலிங்கம் மகன் விஜய்,18; பைக்கை நிறுத்தி, சப் இன்ஸ்பெக்டர் பரிமளாவை திட்டி கையில் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

Advertisement