திருவானைக்காவல் கோயிலில் கோலாகல பங்குனி தேரோட்டம்

திருச்சி: திருவானைக்காவல் கோவிலில், நேற்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழா 48 நாட்கள் நடைபெறும்.
மார்ச் 18ம் தேதி, பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் புறப்பாடு மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது.
அதிகாலையில், உற்ஸவர் மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மகர லக்னத்தில் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.
காலை 7:10 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதிகளில் தேர் வலம் வந்து, நிலை நிறுத்தப்பட்டது.
காலை 10:30 மணிக்கு மேல், அகிலாண்டேஸ்வரி அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தேர்களை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும்
-
கொல்லங்கோடு கோவிலில் துாக்க நேர்த்திக்கடன்
-
மானாமதுரை முனீஸ்வரர் கோவில் ஆலமரம் சாய்ந்ததால் வேதனை
-
208 நகர்ப்புற நலவாழ்வு மையம் இம்மாதம் திறப்பு
-
மெகா நெல் கொள்முதல் நிலையங்கள் பரீட்சார்த்த முறையில் அரசு துவக்கம்
-
இறந்தவரின் பர்சில் பணம் லபக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
-
'சார்பு நீதிமன்றம் அமைக்க ஐகோர்ட் பரிந்துரை தேவை'