பொது உணவகத்தில் சண்டை வாலிபருக்கு 'காப்பு'

மறைமலைநகர், மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன்; அதே பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த நபர், 'சிக்கன் ரைஸ்' கேட்டு உள்ளார்.

'ஆர்டர்' செய்து நீண்ட நேரமாக சிக்கன் ரைஸ் வராததால், அந்த நபர் கடையில் இருந்த அருண்பாண்டியனை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் விசாரித்தனர்.

இதில், கீழக்கரணை பகுதியைச் சேர்ந்த சூர்யா, 22, என்பவர், தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, சூர்யாவை கைது செய்து, விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement