வெடி மருந்து மூலப்பொருள் ஏற்றி வந்த 59 கன்டெய்னர் லாரிகள்

திருவொற்றியூர், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ், பீஹார் மற்றும் ஒடிசாவில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் இருந்து, சென்னை துறைமுகம் வழியாக, வெடிமருந்து மூலப்பொருள் மற்றும் தளவாட பொருட்கள், 59 கன்டெய்னர் லாரிகள் மூலம், 14, 16 மற்றும் 29ம் தேதிகளில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
புதுடில்லியைச் சேர்ந்த 'பால்மர் லாரி அண்டு கோ லிமிடெட்' மற்றும் 'புரோகாம் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட லிமிடெட்' ஆகிய நிறுவனங்கள், துணை ஒப்பந்ததாரரான நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹரன், 30, என்பவர் மூலமாக, இங்கு கொண்டு வரப்பட்டது.
மணலிபுதுநகர் அடுத்த வெள்ளிவாயல் பகுதியில் உள்ள செல்வகுமார், 38, என்பவருக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தில், லாரிகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று காலை பலத்த பாதுகாப்புடன், மத்திய அரசுக்கு சொந்தமான, திருவொற்றியூர், கான்கார்ட் சரக்கு பெட்டக முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு, ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு பின், சென்னை துறைமுகம் சென்றடையும். அங்கிருந்து, கப்பல் வழியாக எகிப்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும்
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!